/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 அடி உயர கூரையில் இருந்து விழுந்தவர் பலி
/
40 அடி உயர கூரையில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : அக் 12, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-குன்றத்துார், தாம்பரம் அருகே, சோமங்கலம் அடுத்த காட்டரம்பாக்கத்தில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.
இந்த ஆலையின் 40 அடி உயர கூரையில் 'சோலார் பேனல்' பொருத்தும் பணியில், வடமாநில தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது, பீஹாரைச் சேர்ந்த நிக்கிகுமார், 26, என்பவர், கூரையில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
உடன் இருந்தோர் அவரை மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நிக்கிகுமார் இறந்தார். இந்த சம்பவம் குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

