ADDED : ஜூன் 28, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்ணாரப்பேட்டை: புளியந்தோப்பு, நரசிம்மன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 44. இவர், மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நடைமேடையில் வசித்து வருகிறார். கடந்த ஜன., 16 காலை, பார்த்தசாரதி பாலம் அருகே நின்றிருந்த ரமேஷை மிரட்டி, மர்ம நபர்கள் 450 ரூபாயை பறித்து சென்றனர்.
வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், சாலமன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை நேற்று கைது செய்து, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.