நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆரில் ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்த இளம் பெண் மாயமானார்.
மாடம்பாக்கத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண், ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்து, பெருங்குடியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கினார்.
இரு தினங்களுக்குமுன் பணிக்கு சென்றவர், விடுதிக்கு திரும்பவில்லை; வீட்டிற்கும் செல்லவில்லை.
இவரது சகோதரியின் மொபைல் போனில், 'என்னை தேட வேண்டாம்' என குறுந்தகவல் அனுப்பி மாயமானார். நடராஜன் அளித்த புகாரின்படி, துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

