/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலை அசத்தல்
/
தென்மண்டல டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலை அசத்தல்
ADDED : டிச 21, 2024 12:27 AM

சென்னை,தென்மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை பல்கலை அணி இரண்டாமிடத்தை பிடித்தது.
வி.ஐ.டி., பல்கலையும், இந்திய பல்கலைகள் கூட்டமைப்பும் இணைந்து, தென்மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியை, வேலுாரில் நடத்தின. தென் மண்டல அளவில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பல்கலை அணிகள் பங்கேற்றன.
போட்டியில், 1,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். அனைத்து போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில், சென்னை பல்கலை மாணவர் அணி, இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.
முதலிடத்தை, பெங்களூர் ஜெயின் பல்கலையும், மூன்றாம் இடத்தை சென்னை வேல்ஸ் பல்கலையும், நான்காம் இடத்தை சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையும் கைப்பற்றின.