sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவளம் வடிகால் திட்டத்திற்கு துறைகளிடையே... ஒத்துழைப்பில்லை! ஆரம்பத்திலேயே புகார்கள் குவிவதால் குழப்பம்

/

கோவளம் வடிகால் திட்டத்திற்கு துறைகளிடையே... ஒத்துழைப்பில்லை! ஆரம்பத்திலேயே புகார்கள் குவிவதால் குழப்பம்

கோவளம் வடிகால் திட்டத்திற்கு துறைகளிடையே... ஒத்துழைப்பில்லை! ஆரம்பத்திலேயே புகார்கள் குவிவதால் குழப்பம்

கோவளம் வடிகால் திட்டத்திற்கு துறைகளிடையே... ஒத்துழைப்பில்லை! ஆரம்பத்திலேயே புகார்கள் குவிவதால் குழப்பம்


ADDED : பிப் 06, 2025 11:44 PM

Google News

ADDED : பிப் 06, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :தென் சென்னை வெள்ள பாதிப்பை தடுக்கும், கோவளம் வடிநிலை பகுதிகளை உள்ளடக்கிய மழைநீர் வடிகால் கட்டும் மூன்றாம் கட்ட பணி, 696 கோடி ரூபாயில் நடக்கவுள்ளது. ஆரம்ப கட்ட பணிக்கே, பல துறை அதிகாரிகள் இடையே ஒத்துழைப்பு இல்லாததால், இப்பணி முறையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மழை வெள்ளம் பாதிப்புகளை தடுக்கும் வகையில், அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலையாறு ஆகியவற்றை வடிநிலை பகுதிகளாக கொண்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகர் முழுதும், 3,050 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளது.

ஆனாலும், விரிவாக்கம் செய்யப்பட்ட, வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் இருந்தது.

ஆலோசனை


இதைத்தொடர்ந்து, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 3,220 கோடி ரூபாய் மதிப்பில், 789 கி.மீ., நீளத்திற்கு, மாதவரம், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை, 500 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடியும் என, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

அதேபோல், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவிடன், கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 1,714 கோடி மதிப்பில், 160.83 கி.மீ., நீளத்திற்கு நடக்கின்றன. இதில், 20 கி.மீ., வரை பணிகள் முடிந்துள்ளன.

அதேநேரம், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு காரணமாக, கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட இருந்த மழைநீர் வடிகால் பணிகள் கைவிடப்பட்டு உள்ளன.

மற்ற சதுப்பு நிலப்பகுதிகள் போன்ற இடங்களில் வடிகால் அமைக்க மாநகராட்சிக்கு, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, 696 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிதி வாயிலாக, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 141.1 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம், சோழிங்கநல்லுார் மண்டலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், மண்டலக்குழு தலைவர் மதியழகன், எம்.எல்.ஏ., ரமேஷ் அரவிந்த், கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிருப்தி


கவுன்சிலர்கள் பேசுகையில், 'மழைநீர் வடிகால் பணிகள் நடந்த முதல் இரு கட்டங்களில், நீரோட்டம் சீராக கட்டாத வடிகால்கள் ஏராளம். ஓ.எம்.ஆர்., - வி.ஜி.பி., அவென்யூவில் நீரோட்டம் சீராகாத பிரச்னை இன்றுவரை நீடிக்கிறது.

'காரப்பாக்கத்தில் தெருக்கள் விடுபட்டுள்ளன. துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதிகளில் கட்டிய வடிகால்களில் சீராக வெள்ளம் செல்லவில்லை. அதுபோன்ற பிரச்னை, மூன்றாம் கட்ட பிரிவில் ஏற்படக்கூடாது' என்றனர்.

அதேபோல், மாநகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும், அவர்களுக்கான பிரச்னைகளை தெரிவித்தனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில், ஒவ்வொரு துறை அதிகாரிகளும் ஒருவரை மாற்றி ஒருவர் புகார் தெரிவித்தனரே தவிர, ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவித்ததாக தெரியவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் அரவிந்த், அதிகாரிகளிடம் கூறியதாவது:

இப்படி ஒவ்வொரு துறையும் குற்றம் சுமர்த்தி கொண்டிருந்தால், திட்ட பணிகளை விரைந்து முடிக்க முடியாது. அரசுக்குதான் கெட்ட பெயர் ஏற்படும். வடிகாலை தரமில்லாமல், நீரோட்டம் இல்லாமல், இழுபறி ஏற்படுத்தி கட்டினால், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு, 'நோட்டீஸ்' வழங்க வேண்டும்.

பொருட்கள் வாங்கி தருவது, பணி செய்வது யார் என, உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள். பொது வெளிக்கு கொண்டு வரும்வரை காத்திருந்தால், மக்கள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாவர். குடிநீர், மின்வாரிய அதிகாரிகள் வடிகால் பணிக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.எம்.ஆரில் வடியும் மழைநீர், சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில் சேர்கிறது. செல்லும் பாதையில் உள்ள வடிகால்களை நீரோட்டம் பார்த்து அமைப்பதில்லை. இதனால், ஓ.எம்.ஆரில் வெள்ளம் தேங்கி, போக்குவரத்து பாதிக்கிறது.

- சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்

மின் கேபிள், குழாய் மாற்ற அரசு ஒதுக்கிய நிதியை தான் வழங்க முடியம். ஆனால், மின்சாரம், குடிநீர் வாரியத்தினர், பல மடங்கு தொகை கேட்கின்றனர். அதை வழங்க முடியாதபோது, பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

- பணிகளை கவனிக்கும் அதிகாரிகள்

பள்ளம் தோண்டும்போது புதிய குழாய்களை சேதப்படுத்துகின்றனர். இதனால், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்னை ஏற்படுகிறது. குழாயை சீரமைக்க, சாலை துண்டிப்பு அனுமதிைய மாநகராட்சி வழங்குவதில்லை.

- குடிநீர் வாரிய அதிகாரிகள்

கேபிளை சேதப்படுத்திய பின், சாதாரண டேப்பால் மறைப்பது, மண், கான்கிரீட் கலவை கொட்டி, வடிகால் பணியை முடிக்கின்றனர். சேதமடைந்த கேபிளை கண்டுபிடிக்க முடியாது. பணி நடப்பது குறித்து தகவலும் தெரிவிப்பதில்லை.

- மின் வாரிய அதிகாரிகள்






      Dinamalar
      Follow us