/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து ஒழுங்குபடுத்த ஆளில்லை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை

ADDED : ஆக 12, 2025 12:34 AM

சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நான்கு முனை சந்திப்பில் சிக்னல் இயக்கப்படாததால், தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.
வாகன போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட சிக்னல்கள், சில இடங்களில் முறையாக இயக்கப்படுவதில்லை.
குறிப்பாக, ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை - பாரதி சாலை - வெஸ்ட்காட் சாலை - ஜி.பி.,சாலை சந்திப்பில் சிக்னல் இயக்கப்படுவதில்லை.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவற்றை சீரமைப்பதற்கும் போக்குவரத்து போலீசார் யாரும் பணியமர்த்தப்படாததால், சிறு சிறு வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.
உயிரிழப்பு ஏற்படும் முன் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது போக்குவரத்து ஒழுங்குப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.