/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் இருந்தும் பயனில்லை 'பம்ப்' செய்து மழைநீர் அகற்றம்
/
வடிகால் இருந்தும் பயனில்லை 'பம்ப்' செய்து மழைநீர் அகற்றம்
வடிகால் இருந்தும் பயனில்லை 'பம்ப்' செய்து மழைநீர் அகற்றம்
வடிகால் இருந்தும் பயனில்லை 'பம்ப்' செய்து மழைநீர் அகற்றம்
ADDED : நவ 15, 2024 12:21 AM

சென்னை, ழைநீர் வடிகாலை முறையாக துார்வாராததால், ஆங்காங்கே மோட்டார் அமைத்து, மாநகராட்சியினர் மழைநீரை அகற்றி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 மண்டலங்களில், 3,000 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளன.
மழைக்கால முன்னெச்சரிக்கையாக, வடிகால் துார்வாரும் பணி மேற்கொள்வது வழக்கம்.ஆனால், பல இடங்களில் மழைநீர் வடிகாலை முறையாக துார்வாரவில்லை.
இதனால், அப்பகுதிகளில் டிராக்டர் ஜெனரேட்டரை பயன்படுத்தி, துார் வாரப்படாத வடிகாலிலிருந்து, துார் வாரப்பட்ட வடிகாலுக்கு மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.
குறிப்பாக, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட திருவல்லிக்கேணி செல்லப் பிள்ளையார் கோவில் தெருவில், மழைநீர் வடிகால் உள்ளது.
இத்தெருவில் ஒரு இடத்திலிருந்து மழைநீரை எடுத்து, அதே சாலையில் உள்ள மற்றொரு வடிகாலில் வெளியேற்றி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, பல லட்சம் ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்குகிறது.
அவற்றை முறையாக அதிகாரிகள் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாகவே, ஒவ்வொரு இடங்களிலும் மழைநீர் வடிகாலிலிருந்து மழைநீரை 'பம்ப்' செய்து, மற்றொரு இடத்தில் வெளியேற்றி வருகின்றனர்.
இதுபோன்று ஒதுக்கப்படும் பணத்தை முறையாக பயன்படுத்தாத பொறியாளர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.