/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்த திருடர்கள்
/
நடிகை சோனா வீட்டில் கத்தியுடன் புகுந்த திருடர்கள்
ADDED : அக் 05, 2024 12:14 AM

மதுரவாயல், நடிகை சோனா வீட்டில் திருட புகுந்த நபர்கள், அவரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ் சினிமா நடிகை சோனா, மதுரவாயல், கிருஷ்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர், அடிக்கடி படப்பிடிப்புக்கு செல்வதால், வீடு பூட்டி கிடப்பது வாடிக்கை. இதை திருடர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அவரது வீட்டில் சுற்று சுவரை எகிறி குதித்து, இரண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். வீட்டின் போர்டிகோவில் இருந்த 'ஏசி' வெளிப்புற கருவியை திருட முயன்றனர். அப்போது சோனா வளர்க்கும் நாய், குலைத்துள்ளது. சத்தம் கேட்டு சோனா வெளியே வந்து பார்த்தார்.
சோனாவை கண்டதும், அவரை கத்தியை காட்டி மிரட்டியபடி, சுவரேறி குதித்து, பைக்கில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சோனா தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு மதுரவாயல் போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.