/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' காதலிக்கு மிரட்டல் தி.மலை வாலிபர் கைது
/
'மாஜி' காதலிக்கு மிரட்டல் தி.மலை வாலிபர் கைது
ADDED : ஜூன் 26, 2025 12:37 AM
மதுரவாயல்,
காதலித்தபோது எடுத்த புகைப்படங்களை வைத்து, முன்னாள் காதலியை மிரட்டிய திருவண்ணாமலை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இரண்டு ஆண்டுகளாக இவரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 32, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க, வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதையறிந்த ஜாகிர் உசேன், இருவரும் ஒன்றாக பழகியபோது எடுத்த புகைப்படங்களை காண்பித்து, 'திருமணத்தை நிறுத்தி விடுவேன்' என, அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த அப்பெண், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், ஜாகிர் உசேனை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.