/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் லீக் திருத்தணி சி.சி., அணி 'த்ரில்' வெற்றி
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் லீக் திருத்தணி சி.சி., அணி 'த்ரில்' வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் லீக் திருத்தணி சி.சி., அணி 'த்ரில்' வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் லீக் திருத்தணி சி.சி., அணி 'த்ரில்' வெற்றி
ADDED : ஏப் 08, 2025 11:51 PM
சென்னை, திருவள்ளூர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியில், திருத்தணி சி.சி., அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், திருவள்ளூரில் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், மூன்றாவது டிவிஷன் 'ஏ' பிரிவு ஆட்டத்தில், லுாகாஸ் டி.வி.எஸ்., அணியும் திருத்தணி சி.சி., அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த லுாகாஸ் டி.வி.எஸ்., அணி 28.2 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. திருத்தணி சி.சி., அணி வீரர் விக்டர், 39 ரன்கள் கொடுத்து, ஆறு விக்கெட்கள் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய திருத்தணி சி.சி., அணிக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் போயின. இதனால், ஒரு கட்டத்தில் வெற்றி என்பது 'மதில் மேல் பூனை' ஆக மாறியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், 28.3 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்து, திருத்தணி சி.சி., அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், முகப்பேர் சி.சி., அணியும் சேஷாத்ரி அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த முகப்பேர் சி.சி., அணி, 45 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பேட் செய்த, சேஷாத்ரி அணி, 36.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து, வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.