/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி
/
திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி
திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி
திருவொற்றியூர் கிளை நுாலக 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி
ADDED : ஆக 11, 2025 01:15 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி நடந்தது.
திருவொற்றியூர் கிளை நுாலகம் வாசகர் வட்டத்தின் 95வது சிந்தனை சாரல் நிகழ்ச்சியில், முதுகலை தமிழாசிரியர் சந்தோஷ்குமார், சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, 'தமிழ் இலக்கியமும் - தமிழர் வாழ்வும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
அன்றைய காலத்தில், போர் அறம் பேரறமாக இருந்தது. சூரியன் உதித்த பின்பே போர் நடந்தன. இன்று, இரவில் சர்வசாதாரணமாக போர்கள் நடக்கின்றன.
அன்றைய காலத்தில் காதலில் கூட அறம் இருந்தது; இன்று கிடையாது. இல்லறம் நல்லறமின்றி போகிறது. அறம், அறிவியல் உணர்ச்சியோடு தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு, தொல்காப்பியம் ஒன்றே சிறந்த சான்று.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி, மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.