/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவூர், திருநின்றவூர் அணிகள் மாநில சிலம்பத்தில் அசத்தல்
/
திருவூர், திருநின்றவூர் அணிகள் மாநில சிலம்பத்தில் அசத்தல்
திருவூர், திருநின்றவூர் அணிகள் மாநில சிலம்பத்தில் அசத்தல்
திருவூர், திருநின்றவூர் அணிகள் மாநில சிலம்பத்தில் அசத்தல்
ADDED : ஜன 08, 2025 08:07 PM

கிண்டி:கிண்டி புனித தோமையர் மலையில் உள்ள மான்போர்ட் பள்ளியில், செந்தமிழ் வீர சிலம்பம் கலை கூடம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் மற்றும் திருவூர் சிலம்பம் கிளப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
பல்வேறு வயது பிரிவு அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில், மேற்கண்ட கிளப் அணி மாணவ - மாணவியர் 102 தங்கம், 41 வெள்ளி, 18 வெண்கலம் என, 201 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.