ADDED : ஜன 16, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்த கணபதி, 34. தெற்கு மாடவீதியில், பெட்ரோல் 'பங்க்' நடத்தி வருகிறார்.
கடந்த, 5ம் தேதி காலை 'பங்க்'கிற்கு, டூ - வீலரில் வந்த மூன்று பேர், பெட்ரோல் நிரப்பிக் கொண்டு, பணம் தராமல் செல்ல முயன்றனர். ஊழியர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த கும்பல், ஊழியர்களை தாக்கினர்.
கணபதியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். விசாரித்த திருவொற்றியூர் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ், 28, பிரதீப், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

