/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை டூ - வீலரால் மோதி போன் பறித்தோர் சிக்கினர்
/
வாலிபரை டூ - வீலரால் மோதி போன் பறித்தோர் சிக்கினர்
வாலிபரை டூ - வீலரால் மோதி போன் பறித்தோர் சிக்கினர்
வாலிபரை டூ - வீலரால் மோதி போன் பறித்தோர் சிக்கினர்
ADDED : ஏப் 25, 2025 11:56 PM

சென்னை, மந்தைவெளி, திருவள்ளூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 36. ேஹாட்டல் ஊழியர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை, மந்தைவெளி தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் மீது மோதினர்.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தவரிடம் இருந்து, மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றனர். பட்டினப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த செல்வராஜ், 25, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 19, ஆகியோர், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் திருடிய மொபைல்போன், திருட்டுக்கு பயன்படுத்திய ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை பறிமுதல் செய்தனர்.