/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
105 மதுபாட்டில் பறிமுதல் மூவர் கைது
/
105 மதுபாட்டில் பறிமுதல் மூவர் கைது
ADDED : ஏப் 03, 2025 11:57 PM
சென்னை, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரில் நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மூதாட்டி ஒருவர் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சொக்கம்மாள், 79, என்ற மூதாட்டியை, கைது செய்த போலீசார், 55 மதுபாட்டில்களை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கோயம்பேடில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், 37, என்பவரை கைது செய்து, 42 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்
அதேபோல், வானகரத்தில் வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற முருகன், 32, என்பவரை போலீசார் கைது செய்து, எட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.