தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண் மீது தாக்குதல் மூவர் கைது

பெண் மீது தாக்குதல் மூவர் கைது

பெண் மீது தாக்குதல் மூவர் கைது


ADDED : ஜன 28, 2025 12:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 12:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கண்ணகி நகர், கண்ணகி நகரை சேர்ந்தவர் சோனியா, 32. அதே பகுதியில், சாலை ஓரத்தில் மீன், கருவாடு வியாபாரம் செய்து வருகிறார்.

அருகில், அதேபோல் மீன் வியாபாரம் செய்பவர் லட்சுமி, 46. இவர்களுக்குள், இடம் பிடிப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைக்கும், இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பிரச்னைக்கு காரணம் சோனியா என நினைத்த லட்சுமி, நேற்று முன்தினம், இரண்டு பேரை அழைத்து சென்று, வீட்டில் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில், சோனியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கண்ணகி நகர் போலீசார், லட்சுமி, அவரது மகள் ஜோதி, 27, மற்றும் உறவினர் டேவிட், 29, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us