/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி ஆவணம் காட்டி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற மூவர் கைது
/
போலி ஆவணம் காட்டி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற மூவர் கைது
போலி ஆவணம் காட்டி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற மூவர் கைது
போலி ஆவணம் காட்டி பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற மூவர் கைது
ADDED : மே 29, 2025 11:53 PM

சென்னை :சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவில் அளித்த புகார்:
வங்க தேசத்தைச் சேர்ந்த முகமது கசிம் பதான், 41, இலங்கையைச் சேர்ந்த சங்குபிள்ளை சரோஜினி தேவி, 58, நேபாளத்தைச் சேர்ந்த தன்ராஜ் பொக்ரியால், 40 ஆகிய மூவரும், இந்திய பாஸ்போர்ட் பெற முயன்றனர்.
போலி ஆவணங்கள் வாயிலாக சுய விவரங்கள் மற்றம் குடியுரிமையை மறைத்து, சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், போலியான ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து, அதன் வாயிலாக பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்ப முயன்றது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பினா தாஸ், 54, ஆந்திராவைச் சேர்ந்த சென்னம்மா, 45, நாகையை சேர்ந்த ராமமூர்த்தி, 44, சிவகங்கையைச் சேர்ந்த பரகதுல்லா, 59 ஆகியோரிடம் விசாரித்து, போலி பாஸ்போர்ட் பெற உதவிய முவகர்களை தேடி வருகின்றனர்.
அனுமதி பெறாமல் இயங்கும் டிராவல்ஸ் நிறுவனங்களை நம்பி, போலியான ஆவணங்களை பெற்று, அதன் வாயிலாக பாஸ்போர்ட் பெற்று, வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என, சென்னை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.