/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் உண்டியல் உடைத்து ரூ.10,000 திருடிய மூவர் கைது
/
கோவில் உண்டியல் உடைத்து ரூ.10,000 திருடிய மூவர் கைது
கோவில் உண்டியல் உடைத்து ரூ.10,000 திருடிய மூவர் கைது
கோவில் உண்டியல் உடைத்து ரூ.10,000 திருடிய மூவர் கைது
ADDED : ஜூன் 28, 2025 04:01 AM

புழல்:புழல், சந்தோஷ் நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த மர்ம நபர்கள், உண்டியலில் இருந்த காணிக்கை பணம் 10,000 ரூபாயை திருடி தப்பினர்.
காலை கோவில் நடை திறந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிலின் பொருளாளர் குருசாமி, 58, புழல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், கொளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ் என்கிற இளங்கோவன், 20, சஞ்சய், 24, பிரித்விராஜ் என்கிற கிஷோர், 24, ஆகிய மூவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.