/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலர் லேப் நிறுவனத்தில் ரூ.20 கோடி மோசடி செய்த மூவர் கைது
/
கலர் லேப் நிறுவனத்தில் ரூ.20 கோடி மோசடி செய்த மூவர் கைது
கலர் லேப் நிறுவனத்தில் ரூ.20 கோடி மோசடி செய்த மூவர் கைது
கலர் லேப் நிறுவனத்தில் ரூ.20 கோடி மோசடி செய்த மூவர் கைது
ADDED : மார் 17, 2025 03:02 AM

சென்னை:'தீனா கலர் லேப்' நிறுவனத்தில், 20 கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜெயவேல். அவர், போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார்.
அதில், 35 ஆண்டுகளாக, தமிழகம் முழுதும், 52 கிளைகளுடன் 'தீனா கலர் லேப்' நிறுவனம் செயல்படுகிறது.
எங்கள் நிறுவனத்தில், சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 40 மற்றும் கோவையை சேர்ந்த கவுதம்,30; சென்னை கீழ் கட்டளையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,42 ஆகியோர் தலைமை கணக்காளர் உள்ளிட்ட பணிகளில் இருந்தனர்.
அவர்கள் மூவரும் போலியாக கணக்கு எழுதி, 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மூன்று பேரையும் நேற்று கைது செய்து, அவர்களிடம் இருந்து, 65.5 சவரன் தங்க நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள், கார் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.