ADDED : மே 03, 2025 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கம் போலீசார், கடந்த 22ம் தேதி 100 அடி சாலையில், 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் வைத்திருந்த, ரோகித், 29, தீபக் சக்கரவர்த்தி, 31, பரத், 27, ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவல்படி, நேற்று வண்டலுாரைச் சேர்ந்த அபியா கிறிஸ்டோபர், 22, அண்ணா நகரைச் சேர்ந்த பிரதீவ் ஷாம், 22, செம்பாக்கத்தைச் சேர்ந்த பரத், 22, ஆகிய மூன்று கல்லுாரி மாணவர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.