ADDED : டிச 24, 2024 01:13 AM

தாம்பரம், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று முன்தினம், பல்லாவரம் பெரிய ஏரி அருகே போலீசார் கண்காணித்த போது, மூன்று பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஷாரபா பல்வார்சிங், 26, சந்தன் பலியர்சிங், 27, அஞ்சனா டிஜல், 40, என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 2.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிம், பள்ளிகொண்டாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது, விசாரணையில் தெரியவந்தது.