/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியின் 23 சவரன் நகை திருட்டு: மூன்று பேர் கைது
/
மூதாட்டியின் 23 சவரன் நகை திருட்டு: மூன்று பேர் கைது
மூதாட்டியின் 23 சவரன் நகை திருட்டு: மூன்று பேர் கைது
மூதாட்டியின் 23 சவரன் நகை திருட்டு: மூன்று பேர் கைது
ADDED : செப் 20, 2025 01:11 AM
சென்னை, மூதாட்டியின், 23 சவரன் தங்க நகைகள் திருடு போன சம்பவத்தில், பணிப்பெண் உள்ளிட்ட மூவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 79; அரிசி வியாபாரி. இவரது மனைவி ஆனந்தகனி, 72, உடல்நிலை சரியில்லாமல், படுக்கையில் உள்ளார். மூதாட்டியை பராமரிக்க, ஒடிசாவைச் சேர்ந்த பிரித்தி, 21, என்பவர் வேலைக்கு வைக்கப்பட்டுள்ளார். கடந்த 17ம் தேதி, ஆனந்தகனியை குளிக்க வைக்க, அவர் அணிந்திருந்த, 23 சவரன் தங்க நகைகளை, அவரது மருமகள் சுமிதா கழற்றி, அலமாரியில் வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, நகைகளை காணவில்லை. இது குறித்து ஜெயராஜ், திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டியை பராமரித்து வந்த பிரித்தி, 26, அவரது கணவர் நிரோஜ், 33, உறவினர் ஜெய்சன், 23, ஆகிய மூவரையும், நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.