ADDED : ஏப் 15, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
3 கடைகளில் திருடிய மூவர் கைது
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகில் மன்சூர் அலி, 48, என்பவர், துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி காலை, இவரது கடையின் பூட்டு உடைத்து, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வைத்திருந்த 50,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. மேலும், அருகில் உள்ள சம்ஸ்கனி, 50, என்பவரின் துணிக்கடையில் 3,000 ரூபாயும், தினேஷ் என்பவரின் கடையில் 5,500 ரூபாயும் திருடப்பட்டது தெரிந்தது. செங்கல்பட்டு நகர போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த அருண், 22, வெள்ளை செல்வா, 20, ராகவேந்திரன், 24, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.