/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரு மாத குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரம்: மூவர் கைது
/
ஒரு மாத குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரம்: மூவர் கைது
ஒரு மாத குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரம்: மூவர் கைது
ஒரு மாத குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரம்: மூவர் கைது
ADDED : அக் 25, 2025 04:55 AM
ஆர்.கே.பேட்டை: ஒரு மாத குழந்தையை விலைக்கு வாங்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஜி.சி.எஸ்.கண்டிகை, அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் மாயா, 30; திருநங்கை.
மாயாவின் சித்தப்பா நகுலய்யா, 49, அவரது மகன் புவனேஷ், 20, மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கவுஸ்பாஷா, 29, ஆகியோர், பிறந்து ஒரு மாதமான பெண் குழந்தையை, 3.10 லட்சம் ரூபாய் கொடுத்து, மாயாவுக்கு வாங்கி கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்படவே, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாயா சேர்த்துள்ளார். மருத்துவமனையில் மாயா அளித்த தகவலில் சந்தேகம் ஏற்படவே, மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தது.
விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரி மலர்விழி, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், குழந்தை ஆந்திர மாநில வெங்கட் ராமய்யா - ஷோபா தம்பதியுடையது என தெரிய வந்தது.
இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை மாயாவிற்கு விற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக, நகுலய்யா, கவுஸ்பாஷா, புவனேஷ் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாயாவை தேடி வருகின்றனர்.

