ADDED : ஆக 28, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பம்மல்,
பம்மல், முத்தமிழ் நகர், நக்கீரன் தெருவை சேர்ந்தவர் கணேஷ், 24. இவர் மீது, சங்கர் நகர் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
மூங்கில் ஏரி, கட்டபொம்மன் தெருவில், ஆக., 23 இரவு, கணேஷ் நின்றிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர், கணேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர்.
சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கணேஷ், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட முன்விரோதத்தில், கொலை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி, பம்மல் மூங்கில் ஏரி பகுதியை சேர்ந்த கார்த்திக், 42, பால்பாண்டி, 46, மகேஷ், 38, ஆந்திராவை சேர்ந்த விஜய், 42, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.