/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தி முனையில் வழிப்பறி சிறுவன் உட்பட மூவர் கைது
/
கத்தி முனையில் வழிப்பறி சிறுவன் உட்பட மூவர் கைது
ADDED : ஜன 05, 2024 12:18 AM
அமைந்தகரை, அமைந்தகரை, சாகிப் தெருவைச் சேர்ந்தவர் லிவின் 18. இவர், தனியார் கல்லுாரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அமைந்தகரை, புல்லா அவென்யூவில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்து வெளியில் வந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போனை பறித்து தப்பினர். இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லிவின் புகார் அளித்தார். சம்பவம் இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார் விசாரித்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை ரோந்து பணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திருமங்கலம் சிக்னல் அருகே, மூவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த அப்பாஸ், 30, பிரேம்குமார், 21, மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், இவர்கள் பல இடங்களில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, ஐந்து போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.