/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரவு பணியில் இருந்த மின் ஊழியர் மீது தாக்குதல் போதை ஆசாமிகள் மூவர் கைது
/
இரவு பணியில் இருந்த மின் ஊழியர் மீது தாக்குதல் போதை ஆசாமிகள் மூவர் கைது
இரவு பணியில் இருந்த மின் ஊழியர் மீது தாக்குதல் போதை ஆசாமிகள் மூவர் கைது
இரவு பணியில் இருந்த மின் ஊழியர் மீது தாக்குதல் போதை ஆசாமிகள் மூவர் கைது
ADDED : அக் 27, 2025 03:08 AM
மாம்பலம்: தி.நகரில், இரவு பணியில் இருந்த மின் வாரிய ஊழியரை தாக்கிய போதை ஆசாமிகள் மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம், விஜயராகவபுரத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வம், 29. தி.நகர் சிங்காரவேலு தெருவில் உள்ள, மாம்பலம் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக, இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த இவர், துணை மின் நிலைய ஷட்டரை மூடி, உள்ளே பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வெளியில் அதிக சத்தம் கேட்டுஉள்ளது.
அங்கு சென்று பார்த்தபோது மது போதையில் ஐந்து பேர், தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அருள்செல்வம், அங்கிருந்து கலைந்து செல்லும்படி, அவர்களிடம் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதை நபர்கள், கற்கள் மற்றும் கைகளால் அருள்செல்வத்தை தாக்கி தப்பினர்.
படுகாயமடைந்த அருள்செல்வம், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து புகாரையடுத்து, மாம்பலம் போலீசார் விசாரித்தனர்.
இதில், திருவான்மியூர் சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ஆனந்த், 22, திருவான்மியூர் ஜெயராமன் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரோஹித், 21, வேளச்சேரி திவாகர், 20, ஆகிய மூன்று பேரையும், நேற்று இரவு கைது செய்தனர்.

