/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட சிறுவன் மணலியில் மீட்பு
/
மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட சிறுவன் மணலியில் மீட்பு
மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட சிறுவன் மணலியில் மீட்பு
மயிலாடுதுறையில் கடத்தப்பட்ட சிறுவன் மணலியில் மீட்பு
ADDED : அக் 27, 2025 03:08 AM

மணலி: மயிலாடுதுறை மாவட்டம், புத்துாரைச் சேர்ந்த அப்துல் ஹாலிக்கின் 8 வயது மகன், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் சிறார் இல்லத்தில் தங்கி, அப்பகுதி அரசு பள்ளியில், 3ம் வகுப்பு பயில்கிறார்.
கடந்த, 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற சிறுவனை காணவில்லை. வடலுார் போலீசார் விசாரணையில், கொள்ளிடம், தைக்கால் பகுதியைச் சேர்ந்த ஷேக் சாகுல் ஹமீது, 41, என்பவர், சிறுவனை கடத்திச் சென்றது தெரியவந்தது.
சிறுவனின் தாயுடன் ஏற்பட்ட பிரச்னையில், ஷேக் சாகுல் ஹமீது, சிறுவனை கடத்தியதும் தெரிந்தது.
இந்நிலையில், சென்னை மணலியில் பதுங்கியிருந்த ஷேக் சாகுல் ஹமீதை கைது செய்த வடலுார் போலீசார், சிறுவனை மீட்டனர்.