/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் பலி மருத்துவமனையில் வாக்குவாதம்
/
இளம்பெண் பலி மருத்துவமனையில் வாக்குவாதம்
ADDED : அக் 27, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை: திருவொற்றியூரைச் சேர்ந்த பிரின்சி ஏஞ்சலின், 26, தலைவலி, கழுத்துவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்காக, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இம்மாதம் 5ல் அனுமதிக்கப்பட்டார்.
மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு, மூளையில் சுருக்கம் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து சடலத்தை பெற்றோர் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க மறுத்து, சிகிச்சைக்கான கட்டணம் 11 லட்சம் ரூபாயை தரும்படி கோரியது.
இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் வந்து சமரச பேச்சு நடத்தி, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

