/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர்களால் மூவர் காயம்: வெளிவட்ட சாலையில் விபத்து
/
வாலிபர்களால் மூவர் காயம்: வெளிவட்ட சாலையில் விபத்து
வாலிபர்களால் மூவர் காயம்: வெளிவட்ட சாலையில் விபத்து
வாலிபர்களால் மூவர் காயம்: வெளிவட்ட சாலையில் விபத்து
ADDED : டிச 08, 2025 04:53 AM
மாங்காடு: வாலிபர்கள் இருவரது ரீல்ஸ் மோகத்தால், வெளிவட்ட சாலையில் ஏற்பட்ட விபத்தில் அவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர்கள் சசி, 20, தனுஷ் 19. இருவரும் விலை உயர்ந்த 'ஹெல்மெட்' வாங்குவதற்காக, நேற்று மாலை, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, கூடுவாஞ்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இருவரும், 'ரீல்ஸ்' எடுத்தபடி சென்றதாக கூறப்படுகிறது.
மலையம்பாக்கம் அருகே சென்றபோது, முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அந்த சமயத்தில், அங்கு ஆட்டோவுடன் நின்றிருந்த கார்த்திக் என்பவர், கீழே விழுந்த இருவரையும் மீட்டு உதவி செய்தார்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஏற்கனவே விபத்தில் சிக்கிய இருவர், ஆட்டோ ஓட்டுநர், கடைசியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் என, ஐந்து பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்தில், 'ரீல்ஸ்' எடுத்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இருவருக்கு லேசான காயமும், மற்ற மூவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த மூன்று பேரும், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

