/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது
/
தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது
தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது
தாறுமாறாக காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியவர் கைது
ADDED : டிச 08, 2025 04:53 AM
கொளத்துார்: கொளத்துார் அருகே மது போதையில் தாறுமாறாக காரை ஓட்டி, எதிரே வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொளத்துார், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் அசோக் ராஜ், 28. இவர், நேற்று முன்தினம் மதுபோதையில், தன் 'ஸ்கோடா' காரை பேப்பர் மில்ஸ் சாலையில் தாறுமாறாக ஓட்டி, எதிரே வந்த கார் மீது மோதினார். சக வாகன ஓட்டிகள் அவரை பிடிக்க முயன்றனர்.
காரை நிறுத்தாமல் சென்ற அசோக் ராஜ், கொளத்துார் திருவீதி அம்மன் சாலை, காமராஜர் சாலை மற்றும் பெரியார் நகர் இ.பி., ஆபீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஓட்டி, எதிரே வந்த பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
தகவலறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார், அயனாவரம் பகுதியில் மது போதையில் இருந்த அசோக் ராஜை மடக்கி பிடித்து, கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தில் கார், பைக் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விபரம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

