/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அம்மா' உணவகத்தில் திருடிய சிறுவர்கள் உட்பட மூவர் கைது
/
'அம்மா' உணவகத்தில் திருடிய சிறுவர்கள் உட்பட மூவர் கைது
'அம்மா' உணவகத்தில் திருடிய சிறுவர்கள் உட்பட மூவர் கைது
'அம்மா' உணவகத்தில் திருடிய சிறுவர்கள் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 20, 2025 11:31 PM
புளியந்தோப்பு,:பூட்டிக்கிடந்த 'அம்மா' உணவகத்தில் புகுந்து காஸ் சிலிண்டர்கள் உட்பட பல்வேறு பொருட்களை திருடிய இரண்டு சிறுவர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க., நகர் மண்டலத்தில், மண்டல நல அலுவலராக மோகனசுந்தரம், 39, என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், பேசின்பாலம் போலீசில், கடந்த 7ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
டிமலஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணி நடப்பதால், அங்குள்ள 'அம்மா' உணவகம் மே மாதம் பூட்டப்பட்டது. இதனிடையே, அங்கிருந்த எட்டு சமையல் 'காஸ்' சிலிண்டர்கள், இட்லி பாத்திரங்கள், மோட்டார் பம்ப் உள்ளிட்ட, 13 வகையான பொருட்கள் திருட்டு போயின.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 19, மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பேசின் பாலம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.