/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ட்ரோனில் ரிப்பன் மாளிகையை வீடியோ எடுத்த மூவரிடம் விசாரணை
/
ட்ரோனில் ரிப்பன் மாளிகையை வீடியோ எடுத்த மூவரிடம் விசாரணை
ட்ரோனில் ரிப்பன் மாளிகையை வீடியோ எடுத்த மூவரிடம் விசாரணை
ட்ரோனில் ரிப்பன் மாளிகையை வீடியோ எடுத்த மூவரிடம் விசாரணை
ADDED : செப் 15, 2025 12:48 AM
சென்னை; சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள, நேரு உள் விளையாட்டு அ ரங்கில், தமிழக அரசின் சார்பில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால், பெரியமேடு முழுதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அப்போது, நேரு உள் விளையாட்டு அரங்கு அருகே உள்ள, சென்னை மா நகராட்சியின் அலுவலகமான ரிப்பன் மாளிகையை மூன்று பேர், 'ட்ரோன்' வாயிலாக, 'வீடியோ' எடுத்தனர். இவர்களை பிடித்து, பெரியமேடு போலீசார் விசாரித்தனர்; ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.
அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி உதவி பேராசிரியர் அம்ஜத், 35, மற்றும் நரேஷ்குமார், 22, மற்றும் முகமது சைப், 22, என்பது தெரியவந்தது.
இவர்கள், அண்ணா நகரில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ எடுக்க சென்று வந்துள்ளனர்.
ஒளி வெள்ளத்தில் ஜொலித்த ரிப்பன் மாளிகையை, ட்ரோன் வாயிலாக வீடியோ எடுக்க முயன்றது தெரியவந்தது.
இதனால், அனுமதியின்றி ட்ரோன் வாயிலாக வீடியோ மற்றும் படம் எடுக்கக்கூடாது என, எச்சரித்து, மூவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். ட்ரோன் கேமராவையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.