/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் 2வது சுற்றில் மூவர் முன்னிலை
/
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் 2வது சுற்றில் மூவர் முன்னிலை
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் 2வது சுற்றில் மூவர் முன்னிலை
ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் 2வது சுற்றில் மூவர் முன்னிலை
ADDED : நவ 08, 2025 02:44 AM

சென்னை: ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டியில், இரண்டாவது சுற்றில், கியூபாவின் கோமேஸ் சான்செஸ், கொலம்பியாவின் பாலென்சியா மொராலெஸ் மற்றும் குஜராத்தின் முகுந்த் ஆகியோர், ஒரே புள்ளியில் முன்னிலை பெற்றுள்ளனர்.
சக்தி குழுமத்தின் 35வது பதிப் பான ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டி, போரூரில் நடந்து வருகிறது. இதில், ஐந்து இந்திய வீரர்கள், மற்ற நாடுகளை சேர்ந்த ஐந்து வீரர்களுடன் மோதி வருகின்றனர்.
நேற்று மதியம் நடந்த இரண்டாவது சுற்றில், தமிழகத்தின் பரத் கல்யாண், குஜராத்தின் முகுந்த் அகர்வாலுக்கு எதிராக கடைசி வரை தன்னம்பிக்கையுடன் போராடி சமநிலையைப் பெற்றார். அதே சமயம், பாலென்சியா - ஓடெரோ அகோஸ்டா ஆட்டம், ரசிகர்களை மூச்சுத் திணற வைத்தது.
வெள்ளை காய்களுடன் விளையாடிய பாலென்சியா, தன் இரண்டு குதிரைகளையும் மாயாஜாலம் போல் இயக்கி, எதிரியின் பாதுகாப்பை சிதறடித்து வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில், பெருவின் ஒப்லிடாஸ் மற்றும் அர்ஜென்டினாவின் ரவுல் இடையேயான போர், 13 நகர்வுகளுக்கு பின் சமனில் முடிந்தது.
அனைத்து சுற்றுகள் முடிவில், கியூபாவின் கோமேஸ் சான்செஸ், கொலம்பியாவின் பாலென்சியா மொராலெஸ் மற்றம் குஜராத் வீரர் முகுந்த் அகர்வால் ஆகியோர், தலா 1.5 புள்ளிகளில் முன்னிலை யில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

