
அண்ணா பல்கலை தடகளம்: சாய்ராம் கல்லுாரி சாம்பியன் சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு, நான்காவது மண்டல அளவிலான போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன.
போட்டிகள் முடிவில், ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி, ஒன்பது தங்கம், ஆறு வெள்ளி, ஏழு வெண்கல பதக்கங்கள் வென்றது; 113 புள்ளிகள் பெற்று, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மாவட்ட கோ - கோ ஆவிச்சி பள்ளி முதலிடம் சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான கோ - கோ போட்டி, கீழ்ப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இறுதி போட்டியில், 17 வயது மாணவர் பிரிவில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி, 13 - 5 புள்ளிகளில் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளியை தோற்கடித்து, மாநில போட்டிக்கு தேர்வானது. மூன்றாம் இடத்தை, வேலம்மாள் பள்ளி வென்றது.
அதேபோல், 19 வயது பிரிவில் வேலம்மாள் பள்ளி முதலிடம்; அடையார் ஸ்ரீசங்கரா பள்ளி இரண்டாமிடம்; ஆவிச்சி பள்ளி மூன்றாம் இடத்தை யும் கைப்பற்றின.

