/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' ரயில்வே ஊழியர் இறப்பு மூவருக்கு ஏழு ஆண்டு சிறை
/
'மாஜி' ரயில்வே ஊழியர் இறப்பு மூவருக்கு ஏழு ஆண்டு சிறை
'மாஜி' ரயில்வே ஊழியர் இறப்பு மூவருக்கு ஏழு ஆண்டு சிறை
'மாஜி' ரயில்வே ஊழியர் இறப்பு மூவருக்கு ஏழு ஆண்டு சிறை
ADDED : ஜூலை 19, 2025 12:27 AM
சென்னை, புரசைவாக்கம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை நாற்காலி, கட்டையால் தாக்கி மரணம் விளைவித்த வழக்கில் மூன்று பேருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புரசைவாக்கம், எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ரஞ்சன். இவரதுபேரன் விக்னேஷ், 2017, செப்., 1ல், அதே பகுதி அம்பேத்கர் நலச்சங்கத்தின் முன் பைக்கில் அமர்ந்து, நண்பருடன் மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், 24, என்பவருக்கு விக்னேஷுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அன்றிரவு 11:00 மணிக்கு, மகேந்திரன் தன் நண்பர்களான சரத்குமார், 25, இளையராஜா, 24, ஆகியோருடன், விக்னேஷ் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த ரஞ்சன், விக்னேஷின் தந்தை நீலகண்டன் ஆகியோர், அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மகேந்திரன் உள்ளிட்டோர், அங்கு கிடந்த கட்டை, நாற்காலியால் தாக்கியதில் ரஞ்சன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசார் விசாரணையில், மரணத்தை விளைவிக்க வேண்டும் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மகேந்திரன் உள்ளிட்டோர் செயல்படவில்லை என்பது தெரியவந்தது.
அது தொடர்பான சட்டப்பிரிவின் கீழ் மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் முன் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் பகவதிராஜ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அவர்களுக்கு தலா ஏழு ஆண்டு சிறை தண்டனை, தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

