/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெரு நாயை கல்லால் கல்லால் தாக்கியவர் மீது வழக்கு
/
தெரு நாயை கல்லால் கல்லால் தாக்கியவர் மீது வழக்கு
ADDED : பிப் 27, 2025 12:46 AM
சென்னை, பிப். 27-
சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் சமரன்,22; விலங்குகள் நல ஆர்வலர். புளூ கிராஸ் அமைப்பில், கல்விச்செயலர் என்ற பொறுப்பில் உள்ளார். அவர், மேடவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார்:
கடந்த, 18 ம் தேதி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் மற்றும் நவீன்ராஜ் ஆகியோர், தலையில் பலத்த காயத்துடன் நாய் ஒன்றை  சிகிச்சைக்காக எடுத்து வந்தனர்.
இருவரிடமும் விசாரித்தபோது, கோவிலம்பாக்கம், தமிழ்குடிமகன், 6வது குறுக்குத் தெருவில், பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய ஒருவர் கற்களால் நாயை அடித்துவிட்டதாகக் கூறினர்.
காயம் ஏற்படுத்தப்பட்ட நாயை, நான் எங்கள் புளூ கிராஸ் அமைப்பின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளேன். கற்களால் நாயை தாக்கிய நபர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

