/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய பால் பேட்மின்டன் போட்டி திண்டிவனம் பள்ளி அணி வெற்றி
/
தேசிய பால் பேட்மின்டன் போட்டி திண்டிவனம் பள்ளி அணி வெற்றி
தேசிய பால் பேட்மின்டன் போட்டி திண்டிவனம் பள்ளி அணி வெற்றி
தேசிய பால் பேட்மின்டன் போட்டி திண்டிவனம் பள்ளி அணி வெற்றி
ADDED : ஜூலை 13, 2025 12:27 AM

சென்னை சென்னையில் நடந்து வரும் பள்ளிகள் இடையிலான தேசிய பால் பேட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், திண்டிவனம் பள்ளி அணி வெற்றி பெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி உடற்கல்வித் துறை சார்பில், பள்ளிகள் இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.
தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த, 32 பள்ளி அணிகள், எட்டு குழுக்களாக பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி, காலிறுதிக்கு முன்னேறும். நேற்று, காலை நடந்த முதல் போட்டியில், திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளி அணி 35 - -29, 35 - -24 என்ற புள்ளிக் கணக்கில், சென்னை, டவுட்டன் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது.
அடுத்தடுத்து நடந்த போட்டிகளில், பள்ளப்பட்டி, மணப்பாறை, மதுரை, ஸ்ரீரங்கம், திண்டுக்கல் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.