/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.99 கோடியில் ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரி
/
ரூ.1.99 கோடியில் ஊராட்சிகளுக்கு டிப்பர் லாரி
ADDED : அக் 23, 2024 12:52 AM
குன்றத்துார், அக். 23-
குன்றத்துார் ஒன்றியம் பரணிபுத்துார், அய்யப்பன்தாங்கல், கோவூர், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் குப்பையை அகற்ற, துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியில் 1.99 கோடி ரூபாய் மதிப்பில், 6 டிப்பர் லாரிகள் வழங்கும் விழா, பரணிபுத்துாரில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, லாரிகளை ஊராட்சிகளுக்கு ஒப்படைத்தார்.
மேலும், 800 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளையும், 14 மாணவர்களுக்கு 1.8 லட்சம் மதிப்பிலான கல்விக் கடனையும்வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.