/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
/
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
ADDED : செப் 30, 2025 02:41 AM

அண்ணா நகர்:திருமணம் செய்வதாக, பல பெண்களை ஏமாற்றி நகை, பணம் பறித்த சிவில் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வரும் வழியில், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சூளைமேடைச் சேர்ந்த 28 வயது பெண், கடந்த மார்ச் மாதம், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
திருமணத்திற்கு வரம் தேடி, கடந்த 2024ல் தனியார் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தேன். அப்போது, சூர்யா என்ற ரோஷன் என்பவர் அறிமுகமானார்.
என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து, வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்தார்.
அதேபோல, இருவரும் சேர்ந்து வீடு வாங்கலாம் எனக் கூறி, 8.20 லட்சம் ரூபாய், ஒன்பது சவரன் நகை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை வாங்கினார். திடீரென தலைமறைவானார்.
சந்தேகம் எழவே, அவர் குறித்து தீர விசாரித்தபோது, மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து அவரை கேட்டால், பழகிய போது எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணா நகர் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
வழக்கில் தேடப்பட்டு வந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சூர்யா, 28; சிவில் இன்ஜினியர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.
இவர், இதே பாணியில் பல பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்து, மோசடி செய்துள்ளார். அந்தவகையில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், கானத்துாரில் ஒரு பெண்ணை மோசடி செய்த வழக்கில், சிறைக்கு சென்று, ஜாமினில் வெளிவந்துள்ளார். அதன்பின்னும், மேலும் பல பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ள, திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த சூர்யாவை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.
ஷெனாய் நகர் அருகே சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியவர், போலீசாரிடம் தப்ப முயன்று, பாலத்தில் இருந்து குதித்தபோது, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவரிடமிருந்து, கார், மொ பைல் போன்களை பறிமுதல் செய்த போலீசார், இவரது மோசடி வலையில் சிக்கி பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.