/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கோபாலபுரம் சி.சி., அணி வெற்றி
/
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கோபாலபுரம் சி.சி., அணி வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கோபாலபுரம் சி.சி., அணி வெற்றி
டி.என்.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் கோபாலபுரம் சி.சி., அணி வெற்றி
ADDED : மார் 13, 2025 11:57 PM

சென்னை டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
ஐந்தாவது டிவிசன் 'பி' பிரிவு: சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடந்த போட்டியில், கோபாலபுரம் சி.சி., மற்றும் இந்தியன் ஆயில் ஆர்.சி., அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த கோபாலபுரம் சி.சி., அணி, 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு, 293 ரன்களை அடித்தது. அணியின் வீரர் நவீன், 96 பந்துகளில், எட்டு சிக்சர், மூன்று பவுண்டரிகளுடன், 110 ரன்களை அடித்தார்.
அடுத்து பேட்டிங் செய்த இந்தியன் ஆயில் ஆர்.சி., அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில், கோபாலபுரம் சி.சி., அணி வெற்றி பெற்றது.
அதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், ஈகல் சி.சி., அணி, 44.5 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 136 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த நேதாஜி சி.சி., அணி, 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 117 ரன்களில் ஆட்டமிழந்தது. ஈகல் வீரர் மருதுபாண்டி, 44 ரன்கள் கொடுத்து, ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆவடி, ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், திருவல்லிக்கேணி காஸ்மோபாலிட்டன் கிளப் முதலில் பேட்டிங் செய்து, 39.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 168 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய கோஹினுார் லெவன், 26.2 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழப்பின்றி, 172 ரன்களை அடித்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் வீரர் தமிழ்ச்செல்வன், ஆட்டமிழக்காமல் 104 ரன்களை அடித்தார்.