sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க...முன்னேற்பாடு பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி நீரை சேமிக்க வசதி

/

வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க...முன்னேற்பாடு பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி நீரை சேமிக்க வசதி

வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க...முன்னேற்பாடு பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி நீரை சேமிக்க வசதி

வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க...முன்னேற்பாடு பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி நீரை சேமிக்க வசதி


ADDED : ஆக 02, 2025 11:15 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் : வடசென்னையில் பருவமழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பை தடுக்க, திருவொற்றியூரில் 5.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் பிரமாண்ட குளம், 1 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கும் வகையில் தண்டையார்பேட்டையில் பிரமாண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மழைக்காலத்தில் குடியிருப்புகளை சூழும் தண்ணீரை, இவற்றுக்கு மடைமாற்றி, இங்கிருந்து மின் மோட்டார் மூலம் பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், சென்னையை ஒட்டியுள்ள புழல் ஏரி மற்றும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீரால், வடசென்னையில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது.

சாலை, குடியிருப்புகளை தண்ணீர் சூழ்வதால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில், மழைநீரால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதால், அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.10 கோடி அதனால், இப்பகுதியை சூழும் மழைநீரை, உடனுக்குடன் பகிங்ஹாம் கால்வாய்க்கு வெளியேற்றும் வகையில், இரண்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில், திருவொற்றியூர் கார்கில் நகரில், 9.95 ஏக்கர் பரப்பில், 11.5 அடி ஆழத்திற்கு மண் துார் வாரப்பட்டு, 10 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட குளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் 330 அடி அகலம், 155 நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இக்குளத்தில் தேக்கப்படும் மழைநீரை, ஐந்து விநாடிகளில், 50,000 - 60,000 லிட்டர் வரை, உடனடியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு வெளியேற்றும் வகையில், 1.75 லட் சம் லிட்டர் கொள்ளளவு உடைய நீர் உந்து நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு நவ., 15ம் தேதிக்குள் குளம் அமைக்கும் பணி முடிந்தால், 5.5 கோடி லிட்டர் தண்ணீரை தேக்க முடியும். தொடர் மழையால் நீர்வரத்து அதிகமாக இருந்தால், வெளியேற்றப்படும் நீரின் அளவும் மாறும்.

அதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்தில், மழைக்காலத்தில் பகிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள எழில் நகர், எம்.ஜி.ஆர்., நகர், கண்ணகி நகர், அன்னை சத்யா நகர், பட்டேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர் தேங்குவது வழக்கம். அச்சமயங்களில், ராட்சத மின் மோட்டார் வைத்து, பகிங்ஹாம் கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்படும்.

மழை விட்டு இரண்டு, மூன்று நாட்களுக்கு பிறகே, தண்ணீரை முழுதாக வெளியேற்ற வேண்டியிருப்பதால், அதுவரை அப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதை தடுக்கும் விதமாக, தண்டையார்பேட்டை மண்டலத்தில், பகிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய, 'சம்ப்' எனும் பிரமாண்ட தொட்டிகள் கட்டும் பணியில், நீர்வளத்துறை ஈடுபட்டுள்ளது.

பட்டேல் நகர், சஞ்சய்காந்தி நகர், தமிழன் நகர், நேரு நகர், அன்னை சத்யா நகர், டிரைவர்ஸ் காலனி, கண்ணகி நகர் உள்ளிட்ட ஏழு இடங்களில், 10 கோடி ரூபாய் செலவில், தலா ஒரு லட்சம் கொள்ளளவு உடைய தொட்டிகள் கட்டும் பணி நடக்கிறது.

திட்டம் மழைக்காலத்தில் குடியிருப்புகளை சூழும் தண்ணீரை, வடிகால்வாய் வழியாக இந்த தொட்டிகளில் சேகரித்து, மழை விட்ட பின், பகிங்ஹாம் கால்வாயில் கடத்த திட்டமிட்டுள்ளதாக, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த இரு திட்டப்பணிகளால், வரும் பருவமழைக்காலத்தில், வடசென்னையில் வெள்ள பாதிப்பு குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக, அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.

ஆனால் ஒரே நேரத்தில், பகிங்ஹாம் கால்வாயில் அதிகப்படியாக வெளியேற்றப்படும் மழைநீரால், தென் சென்னை பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

ஒவ்வொரு மழைக்கும், வடசென்னையை போலவே தென் சென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில், பகிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றப்படும் அதிகப்படி யான நீர், தென் சென்னையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

தண்ணீர் சூழாது இத்திட்டம் குறித்து, தண்டையார்பேட்டை மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் கூறியதாவது:

ஒவ்வொரு மழைக்கும், பகிங்ஹாம் கால்வாய் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனால், மழைக்காலத்தில் வரும் தண்ணீரை, பிரமாண்ட தொட்டிகளில் சேகரிக்கப்படும். அதனால், வீடுகளை தண்ணீர் சூழாது.

தொட்டிகளில் சேகரமாகும் தண்ணீர், மழை விட்ட பின், மின் மோட்டார் மூலம் பம்ப் செய்து, பகிங்ஹாம் கால்வாயில் விடப்படும். இதனால், தண்டையார்பேட்டை பகுதிகளில் மழை பாதிப்பு தடுக்கப்படும்.

முதற்கட்டமாக, அன்னை சத்யா நகர், கண்ணகி நகரில், தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களிலும், தொட்டிகள் அமைக்கப்படும். இப்பணிகள் அனைத்தும், இரு மாதங்களில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தென் சென்னைக்கு

பாதிப்பு இருக்காது

வடசென்னையில் கூவம் முதல் தென் சென்னையில் அடையாறு ஆறு வரை உள்ள பகிங்ஹாம் கால்வாய் 8 கி.மீ., துாரம் உடையது. அதேபோல், அடையாறு ஆற்றில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள பகிங்ஹாம் கால்வாய், 21 கி.மீ., துாரம் உடையது. அடையாறு ஆற்றில் இருந்து பகிங்ஹாம் கால்வாயின் தெற்கு திசையில் 1 கி.மீ., துாரம்; வடக்கு திசையில் 1 கி.மீ., துாரம் வரை வடியும் வெள்ளம், நீரோட்ட அடிப்படையில் அடையாறு ஆற்றில் சேர்ந்துவிடும். மீதமுள்ள 20 கி.மீ., துாரத்தில் வடியும் வெள்ளம் கூவம், முட்டுக்காடு கடலில் சேரும். அதனால், வடசென்னையில் புதிதாக நீர்த்தேக்கம் அமைத்து, பகிங்ஹாம் கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டாலும், தென்சென்னை பாதிக்க வாய்ப்பில்லை என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us