/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (12/04/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (12/04/24)
ADDED : ஏப் 12, 2024 12:16 AM
இன்று இனிதாக பகுதிக்கு (12/04/24)
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
பெருமாளுக்கு திருவாராதனம் -காலை 6:15 மணி. ராமர் மண்டப திருமஞ்சனம் -காலை 9:30 மணி. ராமர் பெரிய வீதி புறப்பாடு.
இடம்: திருவல்லிக்கேணி.
ராமர் கோவில்
ஸ்ரீராம நவமியை முன்னிட்டு திருமஞ்சனம் -காலை 9:30 மணி. ஊஞ்சல் உற்சவம் -மாலை 6:30 மணி. சேஷ வாகன புறப்பாடு -இரவு 8:00 மணி. இடம்: மடிப்பாக்கம்.
சொற்பொழிவு
ஸ்ரீராம நவமி மஹோத்சவத்தை முன்னிட்டு, கம்பராமாயண சொற்பொழிவு: வாலி மோட்சம், மாலை 6:30 மணி. இடம்: அவிச்சி கல்லுாரி, 130ஏ, ஆற்காடு சாலை, விருகம்பாக்கம் -92.
குங்கும அர்ச்சனை
பங்குனி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீசவுந்தரவல்லி தாயார் உடனுறை ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், தாயாருக்கு குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.
சொற்பொழிவு
சங்கர விஜயம் திருவிழாவில்,'ஆதிசங்கரரும் அவரது கிருதிகளும்' எனும் தலைப்பில், விசாகா ஹரி குழுவினர் சொற்பொழிவு -மாலை 6:30 மணி. இடம்: அனந்த பத்மநாம சுவாமி கோவில் அருகில் கல்யாண மண்டபம், அடையாறு.
ஸ்ரீதியாக பிரம்ம கான சபா சார்பில் ஸ்ரீராம நவமி விழா - 2024
ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாசம்- நாகை முகுந்தன். மாலை: 6:30 மணி. இடம்: வாணிமஹால், ஜி.என்.சாலை, தி.நகர், சென்னை-17.
ஸ்ரீராமா அசோசியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம்
ஆண்டாள் குழுவினரின் இசைக் கச்சேரி. மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.இடம்: ஆஞ்சநேயர் கோவில், ஹனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.

