ADDED : மார் 25, 2024 12:35 AM
ஆன்மிகம்
தெப்ப திருவிழா: ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் தெப்ப திருவிழா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
கடல் நீராடல்: மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, சந்திரசேகரர் கடல்நீராடல்- - காலை 6:30 மணி. வான்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சி அருளி வீடுபேறு அளித்தல்- - இரவு 9:30 மணி. இடம்: திருவான்மியூர்.
மஹா கும்பாபிஷேகம்: விசேஷ சந்தி இரண்டாம் கால யாக பூஜை - காலை 9:30 - 11:30 மணி வரை, அருட்பிரசாதம் வழங்குதல், மாலை 5:30 - 8:30 வரை, விசேஷசந்தி, தீபாராதனை. இடம்: அய்யப்ப சுவாமி திருக்கோவில், ராஜா அண்ணாமலைபுரம்.
திருமஞ்சனம்: பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு திருமஞ்சனம்- - மாலை 4:00 மணி. இடம்: சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில், சோமங்கலம்.
பிரம்மோற்சவம்: சுவாமி வீதி புறப்பாடு - காலை 8:00 மணி, ஒய்யாளி சேவை - மாலை 6:30 மணி, சுவாமி வீதி புறப்பாடு உற்சவம் - இரவு 8:30 மணி. இடம்: ஆதிலஷ்மி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை.
பங்குனி பெருவிழா: பால் குடம் ஊர்வலம் - காலை 10:00 மணி. பாலாபிஷேகம் -- மதியம் 12:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.
சந்தனக்காப்பு: புவனேஸ்வரி, சுவாமிநாத சுவாமி, அய்யப்பனுக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி முதல். சந்தனக்காப்பு -- மாலை 5:00 மணி. இடம்: கந்தாஸ்ரமம், கம்பர் தெரு, சேலையூர்.
47ம் ஆண்டு பங்குனி விழா: பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்தஜன சபை நடத்தும் பங்குனி உத்திர விழா மற்றும் 47ம் ஆண்டு விழா - காலை 9:00 மணி. இடம்: பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்தஜன சபை, மகாகவி பாரதி நகர்.
திருக்கல்யாணம்
கபாலீஸ்வரர் கோவில்: கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல் -- -மாலை 6:00 மணி. திருக்கல்யாணம் - -இரவு 7:45 மணி. கயிலாய ஊர்தி, கொடியிறக்கம், சண்டேசுவரர் விழா நிறைவு. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- - காலை 6:15 மணி. ரங்கநாதர் - -வேதவல்லி தாயார் திருக்கல்யாணம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஐராவதீஸ்வரர் கோவில்: பங்குனி உத்திர விழாவில் சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் - மாலை 6:00 மணி. இடம்: ஆனந்தவல்லி சமேத ஐராவதீஸ்வரர் கோவில், பழந்தண்டலம்.
சுந்தரராஜ பெருமாள் கோவில்: சுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் திருமஞ்சனம் - காலை 8:30. சுந்தரராஜ பெருமாள் சுந்தரவள்ளி தாயார் திருக்கல்யாண உற்சவம் - மாலை 6:00 மணி. இடம்: ஆலத்துார் சுப்பிரமணி தெரு, சூளை.
சிவா விஷ்ணு கோவில்: தாயார் பெருமாள் திருக்கல்யாணம் -- காலை 10:00 மணி. தெப்பத்தில் பெருமாள் பவனி -- மாலை 5:00 மணி. இடம்: சிவா விஷ்ணு கோவில், சுண்ணாம்பு கொளத்துார்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்: பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா: வள்ளி திருக்கல்யாணம் - காலை 10:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
பொது
மைசூர் ஓவியக் கண்காட்சி: சி.பி.ராமசாமி ஆர்ட் மையத்தில் மைசூர் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை - காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆழ்வார்பேட்டை.

