ADDED : டிச 15, 2024 12:11 AM
ஆன்மிகம்
வடிவுடையம்மன் கோவில்
ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் நீக்கி தைல அபிஷேகம் - மாலை 6:00 மணி முதல். இடம்: திருவொற்றியூர்.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
பவுர்ணமி புஷ்பாஞ்சலி பூஜை - மாலை 4:30 முதல் 6:00 மணி வரை. இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
லட்சார்ச்சனை:- காலை 9:00 மணி மற்றும் மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
பார்த்தசாரதி கோவில்
திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு - -இரவு 7:30 மணி. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தைலக்காப்பு - இரவு 10:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
தனுர் மாத உஷக்கால பூஜை ஆரம்பம் - -காலை 5:00 மணி. கார்த்திகை ஐந்தாவது சோமவாரத்தை முன்னிட்டு, 1008 சங்குஸ்தாபனம் - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஜடா பாராயணம் நிகழ்ச்சி
கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேஷன் சார்பில் கணபதி பூஜை, மிருத்யுஞ்ஜய மந்திரம் கனபாடம், ஜடாபாராயணம் - காலை 9:30 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர். தொடர்புக்கு - 86680 05073
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
விளக்கு பூஜை
தர்ம சாஸ்தா அய்யப்ப பக்த ஜன சபா சார்பில் 14ம் ஆண்டு விளக்கு பூஜை முன்னிட்டு லட்சார்ச்சனை- - காலை 8:00 மணி. அய்யப்பன் திருவீதி உலா - மாலை 4:00 மணி. இடம்: பேருந்து நிலையம், மடிப்பாக்கம்.
கீதா ஜெயந்தி விழா
கீதா யஜ்ஞா எனும் 108 ஸ்லோகங்கள் வாசித்தல்- - காலை 10:30 மணி. பகவத் கீதை உபன்யாசம்- - முற்பகல் 11:30 மணி. இடம்: இஸ்கான் கோவில், அக்கரை.
வேங்கடவரத பெருமாள் கோவில்
தனுர்மாத உற்சவத்தில் திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை சேவாகாலம் - அதிகாலை 5:00 மணி. திருவாராதனம் சாற்றுமுறை தீர்த்த பிரசாத வினியோகம் காலை 6:00 மணி. பருத்திப்பட்டு, ஆவடி
பொது
நுால் வெளியீட்டு விழா
டாக்டர் புலவர் பாண்டியனின் 'ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை' மருத்துவ நுால் வெளியீட்டு விழா - காலை 10:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், பொழிச்சலுார்.
நகைச்சுவை நிகழ்ச்சி
மடிப்பாக்கம் காமெடி கிளப் சார்பில் நகைச்சுவை மழலை எனும் பெயரில் பல்சுவை காமெடி நிகழ்ச்சிகள்- - மாலை 5:00 மணி முதல். இடம்: சாய் மெட்ரிக் பள்ளி, மடிப்பாக்கம்.
நாடகம்
தலைப்பு: வால் பையன் - இரவு 7:00 மணி. இடம்: ஜானகி எம்.ஜி.ஆர்., மகளிர் கல்லுாரி, அடையாறு.
இன்னிசை
பாடும் வானம்பாடி - மாலை 6.30 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பாரிமுனை.