ADDED : ஆக 17, 2025 01:00 AM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி கோவில்
திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு- 7:30 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
மாதப் பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம் - -காலை 8:00 மணி. யானை வாகன புறப்பாடு - -காலை 8:30 மணி. நால்வர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* அய்யப்பன் கோவில்
பாகவத சப்தாக மகா யக்ஞம் முன்னிட்டு வாமனன் நம்பூதரி தலைமையில் பாராயணம் - -காலை 6:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை. ரங்கசுவாமி தீட்சிதர் உபன்யாசம் - -மாலை 6:15 மணி. இடம்: மடிப்பாக்கம்.
***
- பொது -
* காந்தி சில்ப் பஜார்
மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் காந்தி சில்ப் பஜார் எனும் கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி துணிகளின் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம்.
***
* பர்னீச்சர் கண்காட்சி
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 53 பர்னீச்சர் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் பர்னீச்சர் கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
***
* பெசி ரீட்ஸ்
கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: கார்ல் ஸ்மித் மெமோரியல், பெசன்ட்நகர்.

