/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக .... (28.09.2025) சென்னை
/
இன்று இனிதாக .... (28.09.2025) சென்னை
ADDED : செப் 28, 2025 02:28 AM
நவராத்திரி விழா கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரி ஏழாம் நாள் கற்பகாம்பாள் குதிரை வாகனத்தில் மீனாட்சி அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
முருக பெருமான் கோவில் 'சக்தி' கொலுவை முன்னிட்டு உற்சவர் அம்பாளுக்கு கம்பாநதி அம்மன் அலங்காரம்- - மாலை 6:00 மணி. பரதநாட்டியம் - -மாலை 5:00 மணி. லஷ்மன் ஸ்ருதி குழுவினர் பக்திப்பாடல்கள் - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
கற்பக விநாயகர் கோவில் ஹோமம், அபிஷேகம் -- காலை 7:00 மணி. சாரதாம்பாளுக்கு துர்க்கை அலங்காரம், துர்க்கைக்கு காமாட்சி அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
லட்சுமி பாலாஜி கோவில் குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா -- மாலை 5:00 மணி. பரதநாட்டியம் - மாலை 5:30 மணி. வாத்திய சங்கமம்- - மாலை 6:30 மணி. இடம்: 10வது தெரு, காமகோடி நகர், பள்ளிக்கரணை.
ஓம்கந்தாஸ்ரமம் பகளாமுகி மூலமந்திர சண்டி ஹோமம் -- காலை 9:00 மணி. சந்தனகாப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சர்வ சித்தி விநாயகர் கோவில் துர்க்கை அபிஷேகம் -- காலை 8:00 மணி. தனலட்சுமி அலங்காரம். பக்தி பாடல்கள்: தாரணி, தர்ஷினி குழுவினர் -- மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சாம்பவி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
வராகி அறச்சபை பஞ்சாமிர்த்த அபிஷேகம், கலை நிகழ்ச்சி -- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
அகோபிலமடம் தேசிகன், ஆதிவண் சடகோப சுவாமிகளின் திருநட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு மங்களாசாசனம்- - காலை 8:00 மணி. மங்களகிரி விமானம் புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு காமதேனு அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.
சித்சபா மணிக்கூடம் பெரிய புராண சொற்பொழிவு: எம்.கே.பிரபாகர மூர்த்தி -- பிற்பகல் 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.
வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி ஆறாம் நாள் உற்சவம் - உமா மகேஸ்வரி அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
பொது நாடகம் ஆடுதுறை பாஸ்கரின் 'கல்லணை கட்டிய கரிகால் சோழன்' வரலாற்று நாடகம் - மாலை 4:00 மணி. விழாவில் பங்கேற்பு: ஜி.மதிவதனன் ஐ.ஏ.எஸ்., இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். இடம்: நாரதகான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.
புது சூழலில் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.
இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.
கல்வி உதவித்தொகை மாணவ - மாணவியருக்கு வாணியச் செட்டியார் நலச்சங்கத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா. தலைமை: பி.ராஜ்மோகன். காலை 9:30 மணி முதல். இடம்: கபாலி கல்யாண மண்டபம், வேளச்சேரி.-
சொற்பொழிவு அண்ணா நகர் திருநெறிய தமிழ்மன்றம் சார்பில், முனைவர் சண்முகபிரியாவின் வேதாத்திரி மகரிஷியின் கூற்றுப்படி பக்தியும் ஞானமும் சொற்பொழிவு - மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலனி, அண்ணா நகர் மேற்கு.
வாங்க சிரிக்கலாம் தென்கச்சி ஐயா நினைவாக, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில், கவிஞர் ஜெயபாஸ்கரனின் நகைச்சுவை சந்திப்பு - மாலை 4:00. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, ஜி.எஸ்.டி., சாலை, கடப்பேரி, தாம்பரம்.
சொற்பொழிவு பாரதி பாசறை சார்பில் முனைவர். மா.கி.ரமணனின் திருப்புகழ் வகுப்புகள் தொடர் சொற்பொழிவு - காலை 10:00 மணி. இடம்: திருப்புகழ் சபை, கிராமத்தெரு, திருவொற்றியூர்.