/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (31.08.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (31.08.2025) சென்னை
ADDED : ஆக 31, 2025 02:11 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சத்திர விழா - மாலை 6:45 மணி, திருநடைக்காப்பு - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு மூலவர் கபாலீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
விநாயகர் சதுர்த்தி விழா ஸ்ரீ காரியசித்தி விநாயகர், 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விசர்ஜனம் நிகழ்ச்சி - காலை 7:00 மணி. இடம்: பாலையா கார்டன், மடிப்பாக்கம்.
ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோவில் ராதாஷ்டமியையொட்டி, ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு - காலை 7:15 மணி, ராதாஷ்டமி - 11:45 மணி. இடம்: இஸ்கான் சென்னை, இ.சி.ஆர்., அக்கரை.
செல்லியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி, அம்மன் வீதியுலா - இரவு 7:00 மணி. இடம்: பிரதான சாலை, வேளச்சேரி.
பொது சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கம் சர்வதேச பல் மருத்துவ கருத்தரங்கம், கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
கட்டுமான இயந்திர வர்த்தக கண்காட்சி தென்னிந்தியாவின் முதன்மையான உள்கட்டமைப்பு, கட்டுமான இயந்திர வர்த்தக கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
புத்தக வாசிப்பு நிகழ்வு கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல் அரங்கு, பெசன்ட் நகர்.
இயற்கை சாய கைத்தறி, பொருட்கள் கண்காட்சி இயற்கை சார் அமைப்புகள் சார்பில் இயற்கை சாய கைத்தறி, கைவினை பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
சொற்பொழிவு சென்னை 2,000 பிளஸ் அறக்கட்டளை மற்றும் விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில், ஜி.மீனாட்சியின் 'சொல்லின் செல்வன் அனுமன்' சொற்பொழிவு - மாலை 5:30, அனுமதி இலவசம். இடம்: விவேகானந்தர் இல்லம், மெரினா.
பாரதி பாசறையின், 156ம் மாதத் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு, 'திருப்புகழ் வகுப்புகள்' என்ற தலைப்பில், முனைவர் மா.கி.ரமணன் சிறப்புரை - காலை 10:00 மணி. இடம்: திருப்புகழ் சபை, 39/25 கிராமத் தெரு, திருவொற்றியூர்.
இலவச மருத்துவ முகாம் தீபம் அறக்கட்டளை, அரிமா சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம் -- காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: நித்ய தீப தருமசாலை, வேளச்சேரி.
கொட்டிவாக்கம் அப்பய்ய தீக் ஷிதா பவுண்டேஷன் மற்றும் தாம்பரம் மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் - காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: வேதா மஹால், ராதா நகர், குரோம்பேட்டை. தொடர்புக்கு: 95000 43938.