/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...(26.05.2025) சென்னை
/
இன்று இனிதாக ...(26.05.2025) சென்னை
ADDED : மே 25, 2025 08:13 PM
ஆன்மிகம்
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
அமாவாசை ஹோமம், பூஜை, காலை 9:00 மணி முதல். இடம்: வெம்பாக்கம் மலையடிவாரம், சிங்க பெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
அமாவாசை அபிஷேகம், வேண்டுதல் தேங்காய் கட்டுதல், காலை 9:00 மணி முதல். மாலை 4:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பெரியாண்டவர் கையிலாய வாத்தியத்துடன் சுவாமி, அம்பாள் அமாவாசை ஊஞ்சல் சேவை, மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
கிருத்திகை அபிஷேகம், காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
ஓம் கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம், காலை 9:00 மணி, சுவாமிநாத சுவாமிக்கு கிருத்திகை அபிஷேகம், காலை 10:30 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
நாகாத்தம்மன் கோவில்
பாலமுருகனுக்கு அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
வசந்த உற்சவம்
தியாகராஜ சுவாமி மாடவீதி உத்சவம், மாலை 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.