ஆன்மிகம்
வேதவல்லி தாயார் புறப்பாடு
பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம்- காலை 6:15 மணி. வேதவல்லி தாயார்- புறப்பாடு- மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
நடராஜர் அபிஷேகம்
கபாலீஸ்வரர் கோவிலில், சதுர்தசியை முன்னிட்டு நடராஜபெருமாள் காலசந்தி அபிஷேகம். மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
திருக்கல்யாண உற்சவம்
அனந்தபத்மநாப சுவாமி கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம். மாலை 3:30 மணி முதல் 5:30 மணி வரை. இடம்: அடையாறு.
சுவாமி புறப்பாடு
சிவசுப்ரமண்ய சுவாமி கோவில் பிரம்மோற்சவ, காலை - தொட்டி உற்சவம், இரவு - சிம்ம வாகன புறப்பாடு. இடம்: சைதாப்பேட்டை.
சொற்பொழிவு
மஹா பெரியவர் சரணாலயத்தில், பிரதிஷ்டா தின மகோற்சவம் முன்னிட்டு 'பெரியவாளும், பெருமாளும்' எனும் தலைப்பில் இந்திரா சவுந்திரராஜனின் சொற்பொழிவு. மாலை -6:00 மணி. இடம்: நங்கநல்லுார்.
குங்கும அர்ச்சனை
மாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீசவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், தாயாருக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.
* மாசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பாஷ்யகார ஸ்ரீ செங்கமலவல்லி உடனுறை சமேத சென்ன ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில், மாலையில் தாயார் புறப்பாடு. இடம்: கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம்.
பொது
தாய்மொழி நாள் விழா
அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் கூட்டம். மாலை 5:00 - 7:00 மணி வரை. இடம்: தெற்குத் துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 149 கிரீம்ஸ் சாலை - 6.